உள்ளூர் செய்திகள்
நர்சிங் கல்லூரி மேற்கூரை கட்டிடம் இடிந்து விழுந்தது

தனியார் நர்சிங் கல்லூரி கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்தது

Published On 2022-01-29 13:44 IST   |   Update On 2022-01-29 13:44:00 IST
மயிலாடுதுறையில் தனியார் நர்சிங் கல்லூரி கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்தது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பெரிய சாலியத்தெருவில் எஸ்.கே.ஸ்கூல் ஆஃப் நர்சிங் என்ற தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. 

அதே பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பவருக்குச் சொந்தமான இக்கட்டடத்தில் அசோக் என்பவர் 3 வருடங்களாக இக்கல்லூரியை நடத்தி வருகிறார்.

இக்கல்லூரியில் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை கல்லூரி நிர்வாகிகள் வழக்கம்போல் நர்சிங் கல்லூரியை பூட்டிச் சென்றனர். இந்நிலையில் இரவு 8 மணி அளவில் கட்டிடத்தின் முகப்பு திடீரென இடிந்து விழுந்தது. இதனால், கட்டிடத்தின் தகர மேற்கூரையும் சரிந்து விழுந்தது. இரவுநேரம் என்பதால் கல்லூரியில் மாணவிகள் உள்ளிட்ட யாரும் இல்லாத காரணத்தால் உயிர் சேதம் ஏற்படவில்லை. 

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News