உள்ளூர் செய்திகள்
.

பெண் குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு வாலிபர் கைது

Published On 2022-01-29 13:21 IST   |   Update On 2022-01-29 13:21:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே வாட்ஸ் அப்பில் பெண்ணைக் குறித்து அவதூறு பரப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது பெண். இவர்கல்லாவி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சூளகரை அருகே உள்ள பள்ளசூளகரையை சேர்ந்த கோகுல் (23) என்பவர், எனதுசெல்போன் எண்ணை வாட்ஸ் அப்பில் அனுப்பி என்னை பற்றி தவறான தகவலை பரப்பி உள்ளார்.

இதனால் பலரும் எனது செல்போன் எண்ணுக்கும், வாட்ஸ் அப் எண்ணுக்கும் தவறானஎண்ணத்துடன் தொடர்பு கொண்டு வருகிறார்கள். இது குறித்து கோகுலிடம் கேட்டபோது அவர் எனக்கு மிரட்டல் விடுத்தார். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் மீது போலீசார் விசாரணை நடத்தி கோகுலை கைது செய்தனர். அவர் மீதுஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.

Similar News