உள்ளூர் செய்திகள்
ரேஷன் அரிசி

கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற13 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்- டிரைவர் கைது

Published On 2022-01-28 14:01 GMT   |   Update On 2022-01-28 14:01 GMT
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற13 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார், நேற்று முன்தினம் நள்ளிரவில் கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி அருகே வாகன சோதனை நடத்தினர். நள்ளிரவு 12.30 மணிக்கு அந்த வழியாக வந்த சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 264 மூட்டைகளில் தலா 50 கிலோ எடையுடன் மொத்தம் 13.2 டன் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. குந்தாரப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த குப்பச்சிபாறையை சேர்ந்த மூர்த்தி (வயது 35) என்பவரை கைது செய்து ரேஷன் அரிசியுடன் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News