உள்ளூர் செய்திகள்
.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு 2 பேர் உடல் தானம்

Published On 2022-01-26 07:52 GMT   |   Update On 2022-01-26 07:52 GMT
கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு 2 பேர் தங்களது உடலை தானம் செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் செஞ்சிலுவை சங்கம் சார்பில், காவேரிப்பட்டணம் சந்தைபாளையம் பாண்டியன் (வயது56), எர்ரஹள்ளி ராமசாமி(71) ஆகிய இருவரும், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பயிற்சி மற்றும் ஆய்விற்காக தங்களது உடலை தானம் செய்தனர். 
காவேரிப்பட்டணம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு ஏற்கனவே 21 பேர் உடல் தானம் செய்துள்ளனர்.

இது குறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆண்டுதோறும், 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர்களின் கல்வி ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு வருடமும் 10 முதல் 15 பிரேத உடல்கள் தேவைப்படுகிறது. 

உடல் தானம் அளிக்க முன்வருபவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி உள்ளிருப்பு மருத்துவ அலுவலரை தொடர்பு கொண்டு முழு உடல் தான உறுதிமொழிப் படிவத்தை பூர்த்தி செய்தோ, செஞ்சிலுவை சங்கம் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாகவோ பதிவு செய்யலாம். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News