உள்ளூர் செய்திகள்
பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்த காட்சி.

காலபைரவர் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு

Published On 2022-01-26 06:16 GMT   |   Update On 2022-01-26 06:16 GMT
காலபைரவர் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு செய்தனர்
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில்   அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு  தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்திவிட்டு செல்கிறார்கள்.

இங்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ கால பைரவருக்கு ஆண்டு தோறும் தைமாத தேய்பிறை அஷ்டமியில் பெண்கள் முளைப்பாரி பூஜை எடுத்து வழிபடுவது வழக்கம். அதன்படி உலக நன்மை வேண்டியும், தற்போது உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா வைரசால் தற்பொழுது ஏராளமானோர் மிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாலும் இதை முடிவுக்கு  கொண்டு  வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதலை முன்வைத்து முளைப்பாரி பூஜையை நடத்தினர்.

முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, முடிவில் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  அதனை  தொடர்ந்து நூற்றுக்கும்  மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்று முக்கிய வீதிகளில்  வலம் வந்து இறுதியில் கோவிலை சென்றடைந்தனர்.  பக்தி சிந்தனையுடன் நடைபெற்ற   இவ்விழாவில் ஊர் முக்கியஸ்தர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News