உள்ளூர் செய்திகள்
பயணியிடம் போலீசார் சோதனை செய்த காட்சி.

சிதம்பரம் ரெயில் நிலையத்தில் போலீசார் சோதனை

Published On 2022-01-25 17:32 IST   |   Update On 2022-01-25 17:32:00 IST
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்வதற்காக சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளில் ஏறி போலீசார் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தனர்.
சிதம்பரம்:

குடியரசு தினத்தை யொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக சிதம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் போலீசார் சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் மற்றும் ரெயிலில் இருந்து இறங்கி சென்ற பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர்.

இதைத்தொடர்ந்து சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்வதற்காக சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளில் ஏறி போலீசார் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு  சோதனை செய்தனர்.

பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள இருப்புப் பாதை, தண்டவாளம், நடை மேடை, ரெயில் நிலையம் அருகே  உள்ள பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் மெட்டல் டிடெக்டர்  மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Similar News