உள்ளூர் செய்திகள்
வீராணம் ஏரி

வீராணம் ஏரி நீர்மட்டம் உயர்வு

Published On 2022-01-25 17:04 IST   |   Update On 2022-01-25 17:04:00 IST
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 2 மடங்கு பொழிந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. அதன் பின்னர் தற்போது மழை ஓய்ந்ததால் நீர்மட்டம் படிபடியாக குறைந்தது.
காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த ஏரிக்கு மேட்டூர் அணை மற்றும் பருவமழை காலங்களில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 2 மடங்கு பொழிந்ததால் வீராணம் ஏரி 3 முறை நிரம்பியது. அதன் பின்னர் தற்போது மழை ஓய்ந்ததால் நீர்மட்டம் படிபடியாக குறைந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக வெப்ப சலனம் காரணமாக பரவலாக மழை பெய்துவருகிறது. நேற்று இரவும் நீர் பிடிப்பு பகுதியில் சாரல்மழை பெய்தது. இதன் காரணமாக வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

நேற்று 45.05 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 45.15 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு 652 கனஅடி நீர் வருகிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 63 கனஅடி நீர் அனுப்பப்படுகிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar News