உள்ளூர் செய்திகள்
கைது

கடலூர் மாவட்டத்தில் குடியரசு தினவிழா- முன்னெச்சரிக்கையாக 106 பேர் கைது

Published On 2022-01-25 16:40 IST   |   Update On 2022-01-25 16:40:00 IST
கடலூர் மாவட்டம் முழுவதும் சந்தேக நபர்கள் மற்றும் பழைய குற்றவாளிகள் என 109 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர்:

நாடு முழுவதும் 73-வது குடியரசு தினவிழா நாளை(26-ந்தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்படி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் மேற்பார்வையில் துணைகாவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் என 2000 காவல்துறையினர் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டம் முழுவதும் சந்தேக நபர்கள் மற்றும் பழைய குற்றவாளிகள் என 109 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி கடலூர் மாவட்டத்தில் 32 முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொண்டு 798 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

உரிமம் கோரப்படாத வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும்72 தங்கும் விடுதிகளில் அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. தலைமறைவு குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Similar News