மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்
மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்த வாலிபர் கைது
பதிவு: ஜனவரி 25, 2022 12:40 IST
FILEPHOTO
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காக்காபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மருதாயி (வயது 80). இவர் சம்பவத்தன்று மாலை காக்காபாளையத்திலிருந்து காசாங்கோட்டை அருகே உள்ள தனது நிலத்தின் பக்கத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் வந்து, மருதாயின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு சென்றுவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக மருதாயி மகன் கொடுத்த புகாரின் பேரில், உடையார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் வழக்குப்பதிவு செய்து, காஞ்சிலிக் கோட்டை தெருவை சேர்ந்த முருகன் (29) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.