உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

தேசிய வாக்காளர் தினத்தில் பொதுமக்கள் பங்கேற்கலாம்

Published On 2022-01-24 06:33 GMT   |   Update On 2022-01-24 06:33 GMT
தேசிய வாக்காளர் தினத்தில் பொதுமக்கள் பங்கேற்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் :

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்திய தேர்தல் ஆணையம் உதயமான ஜனவரி 25 ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தின மாக கொண்டாடிடவும், 18 வயது நிரம்பிய தகுதியான புதிய  வாக்காளர்களை சேர்ப்பதற்கும்,  தேர்தல் நிகழ்வுகளில் பங்கேற்கும் வகையிலும், இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி, அரியலூர் மாவட்டத்தில், 12- ஆவது தேசிய வாக்காளர் தினம் 25.01.2022 அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் 12- ஆவது தேசிய வாக்காளர் தினத்தை அனைவரையும் உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் பங்கேற்கத்தக்க தேர்தல்களை உருவாக்குவோம்” என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு, 25.01.2022 அன்று காலை 11.30 மணியளவில் வாக்கா ளர் உறுதிமொழி மாவட்ட கலெக்டர் தலைமையில் அனைத்து அலுவலர்களை கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது.  

இந்த உறுதிமொழி நிகழ்வில் வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம் எனவும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளை “பாரத் வி.சி.” மூலம்  பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், இது குறித்த முழு விபரங்களை மாவட்ட நிர்வாக இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். அனைத்து நிகழ்வுகளும் மாவட்ட கலெக்டரின் அதிகாரப்பூர்வ முக நூல் பேஸ்புக் லைவ் மூலம் ஒளிபரப்பப்படும் என்றும், நிகழ்வு நாளில் அதற்கான இணைப்பு பகிரப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News