உள்ளூர் செய்திகள்
அடுத்தடுத்து 3 வீடுகளில் கைவரிசை
பாணாவரம் அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
பாணாவரம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அரசு மருத்துவமனைக்கு அருகே ஓட்டு வீட்டில் வசிப்பவர்கள் குப்பு (54), கோவிந்தராஜ் (49), வேலு (38). இவர்கள் அனைவரும் வேலூர், சித்தூர் உள்ளிட்ட இடங்களில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.
வழக்கம்போல வீடுகளை பூட்டி விட்டு வேலைக்கு சென்று உள்ளனர். இந்த நிலையில் வேலை முடிந்து நேற்று காலை வந்து பார்த்தபோது வீடுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து ரூ. 2 ஆயிரம், வெள்ளி கொலுசு, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து 3 பேரும் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் 3 வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.