உள்ளூர் செய்திகள்
எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் எந்திரத்தை மின்வாரிய அதிகாரிகள் பார்வை யிட்டபோது எடுத்தபடம்.

எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் எந்திரம் கண்டுபிடித்த விவசாயி

Published On 2022-01-23 07:01 GMT   |   Update On 2022-01-23 07:01 GMT
அரியலூர் அருகே விவசாயி தயாரித்துள்ள எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் எந்திரத்தை மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1 கிலோ வோல்ட் மின்சாரத்தை 2.72 மடங்காக எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் விவசாயி நரசிம்மன் எந்திரத்தை  மின்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அண்மையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்க ரிடம் தனது கண்டுபிடிப்பு மக்களுக்கும், அரசுக்கும் பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கும் எனவும், தனது கண்டுபிடிப்பை அரசுக்கு தருவதற்கு தயாராக இருப்பதாகவும் விவசாயி நரசிம்மன் கூறியிருந்தார். 

விவசாயி நரசிம்மன் கூறுகையில், தான் வாழும் கண்டராதித்தம் கிராம பஞ்சாயத்தில்   தெரு விளக்கு மற்றும் குடிநீர் விநியோகத்திற்காக மட்டும் மின் பயன்பாட்டிற்காக மின்சார வாரியத்திற்கு 2 மாதத்திற்கு ஒரு முறை ரூ.1.5 லட்சம் கட்டணமாக செலுத்தி வருகிறார்கள். 

இந்த நிலையில் எனது கண்டுபிடிப்பை அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் 3&ல் இரண்டு மடங்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆகும் செலவினை கட்டுக்குள் கொண்டு வர இயலும். 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதிகாரிகளிடம் தமிழக அரசின் நிதிச்சுமையை  குறைக்க செலவை குறைக்கும் வகையில் புதிய திட்டங்களை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார். 

அந்த வகையில் எனது எளிய முறையில் மின்சாரம் தயாரிக்கும் எந்திரத்தை நடைமுறைப்படுத்தும் போது பெருமளவில் நிதிச்சுமையை உறுதியாக குறைக்க இயலும் என உறுதிபட தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், எனது கண்டுபிடிப்பை நாட்டுடமையாக்கப்பட வேண்டும் என தமிழக அரசை கேட் டுக்கொண்டார். தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி  திருமானூர்  உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் விவசாயி நரசிம்மன் கண்டுபிடித்த மின்சார தயாரிக்கும் எந்திரத்தை ஆய்வு செய்தார். 

அதிகாரிகள் ஆய்வின்போது திருமழபாடி உதவி மின்பொறியாளர் பிரபாகரன் உடன் இருந்தார்.
Tags:    

Similar News