உள்ளூர் செய்திகள்
தீவிபத்தில் சேதமடைந்த பழைய இரும்பு கடை.

அரியலூரில் பழைய இரும்பு கடையில் தீ விபத்து

Published On 2022-01-23 12:29 IST   |   Update On 2022-01-23 12:29:00 IST
அரியலூரில் இன்று காலை நடந்த தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம் ஆனது.
அரியலூர்: 

அரியலூர் அதிகராபடையாட்சி தெருவில் வசிப்பவர் சேகர். இவர் பால்உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்து வருகின்றார். 

இவரது மகன் கார்த்திக் கைலாசநாதர் கோவில் தெருவில் பழையஇரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றார். நேற்று இரவு 10மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் சுமார் 4 மணியளவில் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மின் இணைப்பை துண்டித்து விட்டு இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். 

 தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் அனைத்துள்ளனர். இத்தீவிபத்தினால் அருகில் உள்ள கடையில் இருந்த மேற்பட்ட கோழிகள் இறந்தன. 

இந்தபழைய இரும்பு கடையில் பழைய இரும்பு சாமான்கள், பேப்பர், பீரோவில் இருந்த பணம், முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்து சாம்பலாகி விட்டன.  

சேதமதிப்பு சுமார் ரூ.10 லட்சம் என்று தெரிய வருகிறது. இந்த தீவிபத்து குறித்து அரியலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News