உள்ளூர் செய்திகள்
தீப்பிடித்து எரிந்த லாரி.

லாரி தீப்பிடித்து எரிந்து ரூ.3லட்சம் நெல்மூட்டைகள் சேதம்

Published On 2022-01-23 11:56 IST   |   Update On 2022-01-23 11:56:00 IST
உடுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
மடத்துக்குளம்:

சிவகங்கையில் இருந்து கேரளாவுக்கு  நெல் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் பெதப்பம்பட்டி பகுதியில் செல்லும் போது திடீரென தாறுமாறாக ஓடிய லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் லாரி  தீப்பிடித்து எரிந்தது. உடனே உடுமலை தீயணைப்பு நிலைய  வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும்  ரூ.3லட்சம் மதிப்புள்ள நெல்மூட்டைகள் மற்றும் லாரி எரிந்து  சேதமானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

Similar News