உள்ளூர் செய்திகள்
வண்டலூர் பூங்கா

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்கள், புலிகளுக்கு கொரோனா தொற்று இல்லை- பூங்கா நிர்வாகம் தகவல்

Published On 2022-01-23 03:13 GMT   |   Update On 2022-01-23 03:13 GMT
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்கள், புலிகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் அவைகளுக்கு தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
வண்டலூர்:

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விலங்குகளின் பாதுகாப்பை கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 17-ந்தேதி முதல் வருகிற 31-ந்தேதி வரை வண்டலூர் உயிரியல் பூங்கா பார்வையாளர்களுக்கு தடை செய்யப்பட்டு மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவில் உள்ள 11 சிங்கங்கள், 4 சிறுத்தைகள், 6 புலிகள் உட்பட 21 பூனை இனங்களிலிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக போபாலில் உள்ள விலங்கு நோய்களுக்கான உயர் பாதுகாப்பு தேசிய நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட முடிவுகளின்படி பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட விலங்குகளுக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News