உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்

Update: 2022-01-22 09:34 GMT
மயிலாடுதுறை தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறையில் கடந்த வருடத்தில் காலம் தவறி பெய்த பருவமழையால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனால் விவசாயிகள் பல்வேறு இடங்களில் நிர்வாணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தினர். 

தமிழக அரசு நிபுணர் குழுக்களை அனுப்பி விவசாயம் பாதிக்கப்பட்ட நிலங்கள் எல்லாம் அதிகாரிகளை வைத்து கணக்கு எடுத்தனர்.

கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.6 ஆயிரத்து 38  வழங்க உத்தரவிட்டார். 

அதனடிப்படையில் மயிலாடுதுறை தாலுக்காவில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடர் மேலாண்மை துறை மூலம்  
ஏராளமான விவசாயிகளுக்கு ரூ.53 லட்சம் அவரவர் வங்கி கணக்கில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் மூலம் வருவாய்த்துறையினர் வரவு வைத்துள்ளனர்.
Tags:    

Similar News