உள்ளூர் செய்திகள்
FILE PHOTOS

உளுந்து பயிரில் விதை பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு அழைப்பு

Published On 2022-01-22 13:13 IST   |   Update On 2022-01-22 13:13:00 IST
அரியலூர் மாவட்டத்தில் உளுந்து பயிரில் விதை பண்ணை அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு அழைப்பு
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் உளுந்து பயிரில் விதைப் பண்ணை அமைக்கவிரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலர்கள் மற்றும் உதவி விதை அலுவலரை தொடர்புக் கொள்ளலாம் என்று திருச்சி மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றுஉதவி இயக்குநர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 
விவசாயிகளுக்கு தேவையான உளுந்து பயிரில் வம்பன் 8 மற்றும்  வம்பன்  10 ஆகிய ரகங்கள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்புவைக் கப்பட்டு உள்ளது. விவசாயிகள் வேளாண் துறை அலுவலர்களை அணுகி, மானிய விலையில் விதை களை பெற்று விதைப் பண்ணை அமைக்கலாம்.
 
உளுந்து ஏக்கருக்கு 8 கிலோ வீதம் 30 சென்டி மீட்டருக்கு 10 சென்டி மீட்டர் இடைவெளியில் விதைத்து சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற எண்ணிக்கையில் பயிர்கள் பராமரிக்க வேண் டும். சாதாரணமாக பயறு வகைகளில், ஏக்கருக்கு 150 முதல் 200 கிலோ வரை மகசூல் கிடைக்கும். நவீன தொழில்நுட்பங்களை கடைபிடித்தல், சான்று பெற்ற விதையைப் பயன் படுத்துதல்,

உயிர் உரம் மற்றும் பூஞ்சான விதைநேர்த்தி செய்தல்,  சரியான பயிர் எண்ணிக்கை பராமரித்தல், பூக்கும் பருவத்தில் 2 சதவீதம் டிஏபி கரைசல் தெளித்தல் ஆகியவற்றை உரிய காலத்தில் கையாண்டால் ஏக்கருக்கு 450 முதல் 500 கிலோவரை மகசூல் பெறலாம்.  உளுந்து பயிரில் விதைப் பண்ணை அமைத்து தரமானவிதை உற்பத்தி செய்து வேளாண் மைத்துறைக்கு   வழங்கினால் உள்ளூர் சந்தை விலையுடன் ஊக்கத்தொகை மற்றும் உற்பத்தி மானியம் ஆகியவை சேர்த்து கூடுதல் லாபம் கிடைக்கும்.

எனவே, உளுந்து பயிரில் விதைப்பண்ணை அமைக்க முன்வரும் விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் உதவி விதை அலுவலரை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News