உள்ளூர் செய்திகள்
நலத்திட்ட உதவிகள் வழங்கிய காட்சி

ரூ.9 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

Published On 2022-01-22 07:04 GMT   |   Update On 2022-01-22 07:04 GMT
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் ரூ.9 லட்சத்தில் மின்கல சக்கர நாற்காலிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்
அரியலூர்:

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் ரூ.9 லட்சத்தில் மின்கல சக்கர நாற்காலிகளை மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசினார் அப்போது அவர் தெரிவித்ததாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஏற்றம் பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, அரியலூர் மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.99,999 வீதம் ரூ.8,99, 991& மதிப்பில் முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான  மின்கலசக்கர நாற்காலிகளை  வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், அரியலூர் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் இணைப்புசக்கரம்  பொறுத்தப்பட்ட பெட் ரோல் ஸ்கூட்டர், திருமண உதவித்தொகை, காதொலிக் கருவிகள், பிரெய்லி கருவிகள், உதவி உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறுநலத் திட்ட உதவிகளை பெற அரியலூர் மாவட்டஆட்சியரகத்தில் செயல்பட்டு வரும் மாவட்டமாற்றுத் திறனாளிகள் நல அலுவகத்தை அணுகி விண்ணப்பித்து, பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில்,   மாவட்ட மாற்றுத்திறனாளிகள்  நல அலுவலர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News