உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு மீண்டும் 3 பேர் பலி

Published On 2022-01-22 12:07 IST   |   Update On 2022-01-22 12:07:00 IST
புதுவையில் நேற்று 5 ஆயிரத்து 221 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
புதுச்சேரி:


இதில் புதிதாக 2 ஆயிரத்து 446 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் ஆயிரத்து 870, காரைக்காலில் 470, ஏனாமில் 83,    மாகியில் 23 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுவையில் 79, காரைக்காலில் 37, ஏனாமில் 16, மாகியில் 14 பேர்   என 146 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

புதுவையில் ஆயிரத்து 388, காரைக்காலில் 77, ஏனாமில் 6,   மாகியில் 26  பேர் என ஆயிரத்து 497 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். 

புதுவை  மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை   ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 316 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 347 பேர் சிகிச்சையில்   குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

புதுவையில் 11 ஆயிரத்து 910, காரைக்காலில் 2 ஆயிரத்து 474, ஏனாமில் 388, மாகியில் 150 பேர் என 14 ஆயிரத்து 922 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 15 ஆயிரத்து 68 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர்.

புதுவை ஜமீன்தார் கார்டனை சேர்ந்த 69 வயது ஆண், மரியாள் நகரை சேர்ந்த 73 வயது முதியவர், காரைக்காலை சேர்ந்த 60 வயது பெண் என 3 பேர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். 

இதனால் மாநிலத்தில்   கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 901 ஆக உயர்ந்துள்ளது. புதுவையில்  2&வது  தவணை உள்பட 15 லட்சத்து 18 ஆயிரத்து 541 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள் ளது.

கடந்த  4 நாட்களுக்கு முன்பு கொரோனாவுக்கு அடுத்தடுத்து 2 நாளில் 3 பேர் பலியானார்கள். அதன் பின்னர் கடந்த 19&ந் தேதி மற்றும் 20&ந் தேதிகளில் தலா ஒருவர் மட்டுமே பலி யானார்கள். 

இப்போது மீண்டும் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளதால் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News