உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மதுபானம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள்

Published On 2022-01-21 13:17 IST   |   Update On 2022-01-21 13:17:00 IST
மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
அரியலூர் :

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது 

மது அருந்துவதாலும் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலும் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அரியலூர் மாவட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் விதமாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இணையவழி மூலம் மதுவினால் ஏற்படும் தீமைகள்,  சமூக கொண்டாட்டங்களும், மது ஏற்படுத்தும் விளைவுகளும் என்ற தலைப்பின்கீழ் ஓவியப்போட்டிகள், கவிதைப்போட்டிகள், விழிப்புணர்வு வாசக (ஸ்லோகன்) போட்டிகள் மற்றும் குறும்படங்கள் தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடத்த மாவட்ட நிர்வாகத்தினரால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த  போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அரியலூர் மாவட்ட இணையதளத்தில்  கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் முலம் தங்களது படைப்புகளை 26.01.22 முதல் 15.02. 22 முடிய பதிவேற்றம் செய்யலாம். 
 
போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட  கலெக்டர் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News