உள்ளூர் செய்திகள்
கைது

காஞ்சிபுரம் ரவுடி அரியானாவில் கைது

Published On 2022-01-21 09:33 IST   |   Update On 2022-01-21 09:33:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரவுடி அரியானாவில் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம்:

சின்ன காஞ்சிபுரம் பொய்யாகுளம் பகுதியை சேர்ந்தவர் தியாகு (வயது 33). பிரபல ரவுடியான இவர் மீது 11 கொலைகள், 15 கொலை முயற்சிகள் உட்பட மொத்தம் 63 வழக்குகள் உள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவதற்காக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

ரவுடிகளின் கொட்டத்தை தடுக்க என்கவுண்ட்டர் ஸ்பெசலிஸ்டு வெள்ளதுரையும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தை கலக்கி வந்த பிரபல ரவுடி தியாகு அரியானாவில் பதுங்கி இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சுதாகருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதைடுத்து போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் தனிப்படையினரை அரியானாவுக்கு அனுப்பி வைத்தார். போலீசார் அங்கு சென்று தியாகுவை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

Similar News