ஓசூர் பகுதியில் 2 இளம்பெண்கள் குழந்தை களுடன் மாயமானார்கள்.
2 இளம்பெண்கள் மாயம்
பதிவு: ஜனவரி 20, 2022 15:58 IST
.
ஓசூர்:
தருமபுரி மாவட்டம், ஆலமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது32). இவர் குடும்பத்துடன் ஓசூர் தேர்பேட்டை பணியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கலைவாணி (30).
இவர்களுக்கு லோகேஷ் வரன் (6) என்ற மகனும், மேகலா (12), ஸ்ரீஜா (3) என்ற 2 மகள்களும் உள்ளனர். கலைவாணி, ஓசூர் காந்தி சிலை அருகில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 12-&ந்தேதி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறி, குழந்தைகளையும் அழைத்து சென்று விட்டார். பின்னர் மாலையில் பெரியசாமி வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு பூட்டியிருப்பதையும், மனைவி, குழந்தைகள் காணாமல் போயிருப்பது அறிந்தும் அதிர்ச்சியடைந்தார்.
இதுதொடர்பாகஅவர் ஓசூர் டவுன் போலீசில் மனைவி, குழந் தைகளை கண்டு பிடித்து தருமாறு புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இதே போல், ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் முருகன் (31), கார்பெண்டர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி துர்காதேவி (27) இவர்களுக்கு நான்கரை வயதில் ரஷ்னா என்ற பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கடந்த 1 வாரத்திற்கு முன்பு குழந்தையுடன், மனைவி காணாமல் போய்விட்ட தாகவும் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து முருகன் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.