உள்ளூர் செய்திகள்
மீன் பிடிக்க சென்ற தொழிலாளி மர்ம சாவு
மீன் பிடிக்க சென்ற தொழிலாளி மர்ம சாவு
வேலூர்:
காட்பாடி வள்ளி மலை ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 35). நேற்றுமுன்தினம் பள்ளி குப்பம் ஏரிக்கு மீன்பிடிக்கச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. அவரது பைக் ஏரிக்கரையில் கிடந்தது. இதனால் அவரை தொடர்ந்து தேடிவந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை பள்ளிகுப்பம் ஏரியில் முருகன் பிணமாக மிதந்தார்.காட்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டனர்.
முருகன் உடலின் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததாக கூறப்படுகிறதது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து முருகன் சாவுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.