உள்ளூர் செய்திகள்
கலெக்டர் ஆய்வு செய்த காட்சி

வளர்ச்சித்திட்ட பணிகள் கலெக்டர் ஆய்வு

Published On 2022-01-20 08:09 GMT   |   Update On 2022-01-20 08:09 GMT
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.
அரியலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ரமண சரஸ்வதி ஆய்வு செய்தார்.

கருப்பிலாக் கட்டளை ஊராட்சி வண்ணாரப்பேட்டையில், தமிழ்நாடு கிராம ஊரக வளர்ச்சி, கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.45.40 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட சாலை பலப்படுத்தும் பணி. அருங்காலில் காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.6.53 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிநபர் கிணறு கட்டுதல் பணி. 15&வது நிதிக்குழு மானியத் திட்டத்தில் ரூ.9.80 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, சுவட்ச் பாரத் மிஷன் திட்டத்தில் ரூ.5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டுமானப் பணி. 

கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் ரூ.23,000 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு, ரூ.13,000 மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேல்நிலை மழைநீர் சேமிப்பு அமைப்பு, கருப்பிலாக்கட்டளையில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கலெக்டர், அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அகிலா, அன்புசெல்வன், உதவி செயற்பொறியாளர் சீதாலட்சுமி, உதவிப் பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News