உள்ளூர் செய்திகள்
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டிய காட்சி.

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பாராட்டு

Published On 2022-01-20 13:28 IST   |   Update On 2022-01-20 13:28:00 IST
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.
அரியலூர்:

தமிழ்  வளர்ச்சித்  துறையால் நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் (ஒப்புவித்தல்)   செய்யும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குறள் பரிசு  ரூ.10,000  வீதம் வழங்கப்பட்டு  வருகிறது. அந்த வகையில்  அரியலூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச் சித்துறையின் சார்பில் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்து பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட 9 மாணவர்க ளுக்கு குறள் பரிசுத் தொகை தலா ரூ.10,000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இதன்படி, 1330 குறட்பாக்களையும் முற்றோதல் (ஒப்புவித்தல்) செய்து குறள் பரிசு பெற்ற விழுப்பனங்குறிச்சி அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் கொ.பால முருகன், 11 ஆம் வகுப்பு பயி லும் மாணவிகள் லிங்கமாயா மற்றும் நந்தினி, 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் சி.சாதனா, சமீரா மற்றும் அபிஷா, 

பெரியாக்குறிச்சி அரசு உயர் நிலைப்பள்ளியைச் சேர்ந்த 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவி சுடர்விழி, க.பொய்யூர் சாத்தமங்கலம் அகில பாரதி மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் கபிலேஷ், தத்தனூர் மீனாட்சி இராமசாமி மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் பூங்குன்றன் என மேற்கண்ட 9 மாணவ, மாண விகளுக்கு குறள் பரிசுத் தொகை தலா ரூ.10,000, பாராட்டு சான்றிதழ் மற்றும் அரசாணை நகல் ஆகியவை வழங்கி, பரிசுப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகளை கலெக்டர்  பெ.ரமண சரஸ்வதி  தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சித்ரா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Similar News