உள்ளூர் செய்திகள்
மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் சூரணம் வழங்கப்பட்ட காட்சி.

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர்

Published On 2022-01-19 10:16 GMT   |   Update On 2022-01-19 10:16 GMT
திருமானூர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கப்பட்டு கொரோனா விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா   மூன்றாவதுஅலை பரவி வரும் இந்த காலகட்டத்தில் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மற்றும்  கபசுர குடிநீர் சூரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களிடத்தில் மருத்துவ அலுவலர் செல்வமணி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வெளியில் செல்லுங்கள்.  

சளி, இருமல், உடல வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து தங்கள் உடலை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.

அடிக்கடி நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கபசுர குடிநீர் பருகுங்கள் என்று பொது மக்களிடம் தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வமணி தலைமை தாங்கினார்.  

இதில் திருமானூர் சித்த மருத்துவ அலுவலர் சாகுல் ஹமீது கலந்துகொண்டு பொது மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் சூரணம் வழங்கினார்.

முடிவில் மருந்தாளுநர் குணசேகரன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News