உள்ளூர் செய்திகள்
லாரியில் சிக்கி பலியானவர் உடல்.

லாரியில் சிக்கி மேஸ்திரி சாவு

Published On 2022-01-19 15:27 IST   |   Update On 2022-01-19 15:27:00 IST
காட்பாடியில் லாரி சக்கரத்தில் சிக்கி மேஸ்திரி பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:

காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 30). கட்டிட மேஸ்திரி. இவரது நண்பர் பாலாஜி. இன்று காலை இருவரும் பைக்கில் வேலூர் நோக்கி வந்தனர். பாலாஜி பைக்கை ஓட்டி வந்தார். 

தாமோதரன் பின்னால் அமர்ந்திருந்தார். சில்க் மில் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். பின்னால் இருந்த தாமோதரன் லாரியின் பின்பக்க டயரில் சிக்கினார்.

அவர் மீது லாரி ஏறி ஏறி இறங்கியது.தாமோதரன் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.பாலாஜி படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்தால் காட்பாடி வேலூர் மெயின் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

படுகாயமடைந்த பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News