உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவுக்கு சவால் விடுவது தவறானது: அ.தி.மு.க.கண்டனம

Published On 2022-01-19 08:17 GMT   |   Update On 2022-01-19 08:17 GMT
அப்பாவி மக்களை கேடயமாக பயன்படுத்தி கொரோனாவுக்கு சவால் விடுவது தவறானது என அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி :

புதுவை அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று  சமூக பரவலாக மாறி அகில இந்திய அளவில் கொரோனா தொற்று  அதிகம் பரவக்கூடிய மாநிலமாக புதுவை மாறி உள்ளது. இதற்கு மாநில அரசின் தவறான வழிகாட்டுல் காரணமாகும். 

கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அவசியம் இல்லை என்றாலும், வெளிமாநில மக்கள் அதிகம் கூடுவதையும்,  நம் மாநிலத்தில் சண்டே மார்க்கெட், மார்க்கெட் பகுதி, காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் உள்ளிட்ட பல இடங்களில் அதிகப்படியான மக்கள் கூடுவதை தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமையாகும்.

கொரோனா முன் னெச்சரிக்கை தடுப்பு விஷயத்தில் கவர்னரின் செயல்பாடு வேறுபட்டு உள்ளது. அப்பாவி பொது மக்களை கேடயமாக பயன்படுத்தி தொற்றுக் கிருமிகளுக்கு சவால் விட்டு வருவது தவறான ஒன்றாகும். 

கொரோனாவுடன் நாம் வாழ்ந்தாக வேண்டும். அதற்காக மக்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என மக்களுக்கு அறிவுரைகளை வழங்குவது ஏற்புடையது அல்ல.

மாவட்ட பேரிடர் முகமை, மாநில பேரிடர் மேலாண்மை முகமை, மாநில   நிர்வாகக்குழு, இந்த 3 அமைப்புகளும் மக்க ளுக்கு உயிர் பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒரு உயர்மட்ட அமைப்பாகும். 
இந்த 3 குழுக்களும் இன்றுவரை ஒரு ஆலோசனை கூட்டத்தை கூட இணைந்து நடத்த கவர்னர்  நடவடிக்கை எடுக்காதது தவறான ஒன்றாகும். 

ஒரு மாநிலத்திற்கு வருவாய் என்பது அவசிய மான ஒன்றாக இருந்தாலும், மக்களுடைய  உயிரைப் பற்றி கருத்தில் கொள்வது அவசியமான ஒன்றாகும். 

எனவே, நம்முடைய மாநிலத்தினுடைய கவர்னர்  இந்த நோய் தோற்று அதிகம் பரவுவதை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில கவர்னர், முதல்& அமைச்சர் ஆகியோர் திருவிழாக்கள், அரசு விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்பதை தடுக்க வேண்டும். 

இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, காவல்துறை ஆகியவற்றின் உயர்மட்ட கூட்டத்தை முதல்& அமைச்சர் உடனடியாக கூட்டி, அரசு  நேர்வழியில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அன்பழகன் அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News