உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

வேலூர் ஜெயில் சூப்பிரண்டு, அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் 5 பேருக்கு கொரோனா

Published On 2022-01-19 04:54 GMT   |   Update On 2022-01-19 04:54 GMT
வேலூர் மாவட்டத்தில் இன்று 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 54,514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 51,183 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,150 பேர் பலியானார்கள். தற்போது 2,181 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடன் அலுவலக பணிகளில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜெயிலில் கொரோனா தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம் வேலூர் ஜெயிலில் துணை ஜெயிலர் ஒருவரும், டாக்டர் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் ஜெயில் சூப்பிரண்டு பாதிக்கப்பட்டுள்ளதால் ஜெயில் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் 5 டாக்டர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் நேற்று 249 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News