உள்ளூர் செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் 50 சதவீத ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர உத்தரவு

Published On 2022-01-19 03:20 GMT   |   Update On 2022-01-19 03:22 GMT
கொரோனா பரவலை தடுக்க சென்னை விமான நிலையத்தில் 50 சதவீத ஊழியர்கள், சுழற்சி முறையில் பணிக்கு வர விமான நிலைய ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிா்வாகம், எலக்ட்ரிக்கல், தொழில்நுட்பம், தீயணைப்பு, ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சுமாா் 1,500-க்கும் மேற்பட்ட விமான நிலைய ஆணையக ஊழியா்கள் பணியாற்றுகின்றனா்.

கொரோனா 3-வது அலை சமீப காலமாக வேகமாக பரவி வருகிறது. சென்னை விமான நிலையத்திலும் விமான ஆணையக ஊழியா்கள், விமான நிறுவன ஊழியா்கள், பாதுகாப்பு படை போலீசாா் உள்ளிட்ட சுமாா் 70-க்கும் அதிகமானவர்கள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் விமான நிலைய ஆணையக ஊழியா்கள் இருபிரிவுகளாக பிரிக்கப்பட்டு சுழற்சி முறையில் 50 சதவீத ஊழியா்களே பணிக்கு வரவேண்டும் என்று விமான நிலைய ஆணையகம் உத்தரவிட்டு உள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கவே நிா்வாகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், மறுஉத்தரவு வரும்வரை இந்த ஏற்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா முதல் அலை, 2-வது அலை பரவியபோதும் இதேபோன்று 50 சதவீத ஊழியா்கள் சுழற்சி முறையில் பணியாற்றும் முறை அமல்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News