உள்ளூர் செய்திகள்
முக கவசம்

முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம்- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2022-01-18 11:33 GMT   |   Update On 2022-01-18 11:33 GMT
கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை பொதுமக்கள் பின்பற்றும் பொருட்டு அபராதத் தொகை 200 ரூபாயிலிருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடலூர்:

கடலூர் கலெக்டர் பாலசுப்பிரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில் ‘ஒமைக்ரான்’ கொரோனா வைரஸ் அச்சுறுத்தும் சூழலில் பொதுமக்கள் அதிகமான அளவில் கூடும் இடங்களில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகையால் பொதுமக்கள் கூட்டம் கூடாமல், அவசியமில்லாமல் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.  மேலும் ஜவுளி கடை முதல் பெட்டிக்கடை உள்ளிட்ட அனைத்து கடை உரிமையாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

தங்கள் கடைகளுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்து கொள்ளவேண்டும். அவ்வாறு முகக்கவசம் அணியாத கடை உரிமையாளர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடைகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

கொரோனா அதிகரித்து வரும் சூழ்நிலையில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை பொதுமக்கள் பின்பற்றும் பொருட்டு அபராதத் தொகை 200 ரூபாயிலிருந்து ரூ.500 ஆக உயர்த்தி தமிழக அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணிவதன் மூலம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும். இரண்டாவது தவணை தடுப்பூசி போடாத நபர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News