உள்ளூர் செய்திகள்
முதியவரை மாடு முட்டி தூக்கி வீசிய காட்சி.

மாடு முட்டி முதியவர் பலி

Published On 2022-01-18 15:24 IST   |   Update On 2022-01-18 15:24:00 IST
கீழ் அரசம்பட்டில் மாடு முட்டி முதியவர் பலியானார்.
வேலூர்:

வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே உள்ள கீழ்அரசம்பட்டு கிராமத்தில் நேற்று மாடு விடும் விழா நடந்தது. 

இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 140 காளைகள் பங்கேற்றன.உறுதிமொழி ஏற்ற பிறகு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.  

இந்த நிகழ்வில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு விழாவை ரசித்தனர்.

விழாவின்போது ஆரணி அருகே உள்ள புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த நாமதேவன் (வயது 60) என்பவரை சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டி தூக்கி வீசியது.

இதில் நாமதேவன் படுகாயம் அடைந்தார். அவருக்கு மருத்துவ குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மேலும் மாடு முட்டியதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
மாடு முட்டி முதியவர் இறந்ததால் விழாக்குழுவினர் 3 பேர் மற்றும் காளையின் உரிமையாளர் மீது வேலூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News