உள்ளூர் செய்திகள்
காயங்களுடன் கிடந்த மயிலை சித்ரா மீட்டு வனத்துறை ஊழியர்களிடம் ஒப்படைத்த காட்சி.

கிருமாம்பாக்கம் அருகே காயங்களுடன் கிடந்த மயில் மீட்பு பெண்ணுக்கு பாராட்டு

Published On 2022-01-18 09:27 GMT   |   Update On 2022-01-18 09:27 GMT
கிருமாம்பாக்கம் அருகே காயங்களுடன் கிடந்த மயிலை மீட்ட பெண்ணை பொதுமக்கள் பாராட்டினர்.
புதுச்சேரி:-

கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் நாடார் வீதியை சேர்ந்தவர் சித்ரா (வயது 46). கூலித் தொழிலாளி. 

இவர் தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள ஒரு வாய்க்காலில், பெண்மயில் ஒன்று அடிபட்டு காயங்களுடன் கிடந்தது. இதனை பார்த்த சித்ரா மயிலை மீட்டு தனது வீட்டிற்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து, உணவு வழங்கி மயிலின் உயிரை காப்பாற்றினார்.  பின்னர் இது குறித்து போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கிருமாம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், உதவி சப்--இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மயிலை பார்வையிட்டு, இது குறித்து விசாரணை நடத்தினர்.  

இதனிடையே, அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் சக்திவேல், வேலாயுதம் ஆகியோரிடம் சித்ரா மயிலை ஒப்படைத்தார். வனத்துறை ஊழியர்கள் மயிலுக்கு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றனர். காயங்களுடன் கிடந்த மயிலை காப்பாற்றிய சித்ராவை, போலீசாரும், வனத்துறை ஊழியர்களும் பாராட்டினர்.
Tags:    

Similar News