உள்ளூர் செய்திகள்
ஒமைக்ரான் பரிசோதனை

புதுவையில் ஒமைக்ரான் பரிசோதனை நிறுத்தம்

Published On 2022-01-18 03:10 GMT   |   Update On 2022-01-18 03:10 GMT
ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சை முறைகள் தான் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:

உலகம் முழுவதும் கொரோனாவின் 3-வது அலை மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. புதுச்சேரியில் ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி உள்ளவர்களின் சளி மாதிரிகள் பரிசோதனைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பரிசோதனை முடிவுகள் வர 20 முதல் 25 நாட்கள் ஆகிறது.

இந்த நிலையில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியாக சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் அதே சிகிச்சை முறைகள் தான் வழங்கப்பட்டு வருகிறது.

எனவே ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் வர காலதாமதம் ஏற்படுவதாலும், பரிசோதனை கட்டணம் அதிகம் என்பதாலும் தற்போது ஒமைக்ரான் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News