உள்ளூர் செய்திகள்
தற்கொலை

வண்டலூர் ஊராட்சியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-01-17 15:25 IST   |   Update On 2022-01-17 15:25:00 IST
வண்டலூர் ஊராட்சியில் சரக்கு ஆட்டோ வாங்கி தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வண்டலூர்:

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சியில் உள்ள ஓட்டேரி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மணி (வயது 22). மளிகை பொருட்கள் விற்பனை செய்வதற்காக சரக்கு ஆட்டோ வாங்கி தர வேண்டும் என்று வீட்டில் கேட்டுள்ளார்.

தற்போது பணம் இல்லை இன்னும் சில மாதங்கள் கழித்து வாங்கலாம் என்று வீட்டில் கூறியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த மணி கடந்த 10-ந்தேதி தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக மணி உயிரிழந்தார்.

இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

Similar News