உள்ளூர் செய்திகள்
மறைமலைநகர் பகுதியில் ரோட்டில் மாடுகள் சுற்றினால் உரிமையாளருக்கு திருப்பி வழங்கப்படாது

மறைமலைநகர் பகுதியில் ரோட்டில் மாடுகள் சுற்றினால் உரிமையாளருக்கு திருப்பி வழங்கப்படாது - நகராட்சி

Published On 2022-01-17 15:07 IST   |   Update On 2022-01-17 15:07:00 IST
மாட்டின் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான மாடுகளை சாலையிலும் மற்றும் பொது இடங்களிலும் சுற்றி திரிய விடாமல் தங்களுக்கு சொந்தமான இடங்களில் வைத்து பராமரிக்க வேண்டும்.
செங்கல்பட்டு:

மறைமலைநகர் நகராட்சி கமி‌ஷனர் லட்சுமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

மறைமலை நகராட்சியானது நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள், தனியார் கல்லூரிகள், வணிக வளாகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், தொடக்க பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் உள்பட அனைத்தையும் கொண்ட முதல் நிலை நகராட்சியாகும்.

நகராட்சியை ஒட்டி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரெயில் நிலையங்கள் அமைந்துள்ளது.

நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகளுக்கு வேலை நிமித்தமாக வந்து செல்கின்றனர். பாவேந்தர் சாலை, காந்தி நகர், காட்டாங்கொளத்தூர் மற்றும் திருக்கச்சூர் உள்பட நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் நாள் தோறும் விபத்துகள் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே மாட்டின் உரிமையாளர்கள் தங்களுக்கு சொந்தமான மாடுகளை சாலையிலும் மற்றும் பொது இடங்களிலும் சுற்றி திரிய விடாமல் தங்களுக்கு சொந்தமான இடங்களில் வைத்து பராமரிக்க வேண்டும்.

மீறி தெருக்களில் மற்றும் பொது இடங்களில் மாடுகள் சுற்றி திரியும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகம் மூலம் மாடுகளை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு அருகிலுள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். மாட்டின் உரிமையாளர்களுக்கு திரும்பி வழங்கப்படாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Similar News