உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தாம்பரம் பகுதியில் நோய் தொற்று அதிகரிப்பு சித்த மருத்துவமனையில் 100 படுக்கையுடன் கொரோனா வார்டு

Published On 2022-01-17 09:11 GMT   |   Update On 2022-01-17 09:11 GMT
தாம்பரம் அடுத்த சானட்டோரியத்தில் இயங்கி வரும் தேசிய சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுடன் கூடிய தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியான தாம்பரம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

கடந்த சில தினங்களாக கல்லூரி மாணவ-மாணவி கள் பெரிய வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் ஏராளமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொது மக்களுக்கும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையைக் கருத்தில் கொண்டு தாம்பரம் அடுத்த சானட்டோரியத்தில் இயங்கி வரும் தேசிய சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுடன் கூடிய தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு வார்டை இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ரகுநாத் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

Tags:    

Similar News