உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை-காங்கிரஸ் குற்றச்சாட்டு

Published On 2022-01-17 08:52 GMT   |   Update On 2022-01-17 08:52 GMT
கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் வியாபாரிகளை திருப்திபடுத்த அரசு செயல்படுகிறது என காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.
புதுச்சேரி: 

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா   வேகமாக பரவுவதில், புதுவை மாநிலம், இந்தியாவில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. கவர்னரின் வானளாவிய அதிகாரத்தில் ஆட்பட்டுள்ள என்.ஆர். காங்கிரஸ்- பா.ஜனதா அரசு ஊரடங்கு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியான காலத்தில் காலத்தோடு செய்யாமல் ஒரு சில வியாபாரிகளை திருப்திப்படுத்துவதற்காக செயல்படுவதாக தெரிகிறது.

நம்மை விட 50 மடங்கு மக்கள் தொகையில் பெரிய மாநிலமான தமிழ்நாட்டில் சுற்றுலாத்தலங்களை மூடுவது, வழிபாட்டு தலங்களை மூடுவது, டாஸ்மாக் உள்ளிட்ட வியாபார ஸ்தாபனங்களை மூடுவது போன்றவை  செய்யப்படுகிறது. இதனைஅறியாமையால் செய்யப்படுகிறது என்று புதுவை ஆட்சியாளர்கள்  நினைக்கிறார்கள். 

புதுவை  மக்கள் மீது அக்கறை ஆட்சியாளர்களுக்கு இருந்தால் இதுபோல் செயல்பட மாட்டார்கள். புதுவை மாநில மக்களின் உடல்நலம் மற்றும் உயிரை விட பெரியது என்று இவர்கள் எதை மதிப்பிடுகிறார்கள்? அஞ்சத்தக்கவை என்று தெரிந்தும்  அஞ்சாமல் இருப்பது அறியாமை  என வள்ளுவர் கூறியுள்ளதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு ஏ.வி. சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News