உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

கொரோனா விதி மீறிய வாகன ஓட்டிகள், இறைச்சி கடைகளுக்கு அபராதம்

Published On 2022-01-17 08:44 GMT   |   Update On 2022-01-17 08:44 GMT
ஜோலார்பேட்டை பகுதியில் கொரோனா விதியை மீறிய வாகன ஓட்டிகள், இறைச்சி கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை பகுதியில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் முக கவசம் அணிந்து வெளியில் வருவதை கண்காணிக்கும் வகையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் நேற்று பொன்னேரி மற்றும் ஜோலார்பேட்டை ஜங்ஷன் பஸ் நிறுத்தம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பல்வேறு வாகனங்களில் வாகன ஓட்டிகள் முக கவசம் இன்றி வெளியில் சுற்றித் திரிந்த 70 பேருக்கு தலா 200 வீதம் 14 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

மேலும் சந்தைக்கோடியூர், பக்கிரிதக்கா, பால்னாங்குப்பம், சாலை நகர், ஒட்டப்பட்டி, பெரிய மூக்கனூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா விதிமுறைகள் மீறிய இறைச்சி கடைகள் திறந்து வைத்து வியாபாரம் செய்த 30 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.500 வீதம் 15 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

நேற்று ஜோலார்பேட்டை பகுதியில் முழு ஊரடங்கு போது ஒரு நாளில் 100 பேருக்கு ரூ.29 அபராதம் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News