உள்ளூர் செய்திகள்
கோப்பு புகைப்படம்

புதுச்சேரியில் 10,12-ம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு

Published On 2022-01-17 13:25 IST   |   Update On 2022-01-17 13:25:00 IST
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: 

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் இன்றைய நிலவரப்படி 907 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  புதுச்சேரியில் வரும் 19 ஆம் தேதி 10,12- ம் வகுப்புகளுக்கு தொடங்கவிருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா பரவல் குறைந்த பிறகு திருப்புதல் தேர்வுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் புதுச்சேரி மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.  

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று புதுச்சேரியிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Similar News