உள்ளூர் செய்திகள்
100 சதவீதம் தடுப்பூசி போட மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுரை
புதுவையில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த மாணவர்களின் பெற்றோருக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கி வழங்கி உள்ளது.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த 3--ந்தேதி முதல் 15 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதுவை அரசின் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமலு, பள்ளி கல்விதுறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
புதுவவையில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதன்படி 2004 முதல் 2007 வரை பிறந்த மாணவர்களுக்கு (15 முதல் 17 வயது வரை) பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தில் இதுவரை 60 சதவீதம் மாணவ--மாணவிகளுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
பெற்றோர்கள் ஒப்புதல் பெறப்படாத காரணத்தால் 40 சதவீதம் மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட பள்ளி பொறுப்பு ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் 15 முதல் 17 வயது வரை உள்ள 100 சதவீதம் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.