நாளை முழு ஊரடங்கு- கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க திரண்ட பொதுமக்கள்
கடலூர்:
தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான், கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டுத்தலங்கள் மூடுவது, பஸ், தியேட்டர், ஓட்டல்கள், சலூன் கடைகள், நகைக் டைகள், துணிக்கடைகளில் 50 சதவீதம் பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டு உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நபருக்கு கொரோனா இருந்து வந்த நிலையில் நேற்று 308 பேருக்கு கொரோனா தொற்று பரவும் ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களில் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றது.
இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் ஆயிரக்கணக்கான மக்கள் எந்தவித அரசு உத்தரவை பின்பற்றாமல் சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணியாமல் மீன்கள் வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் அவரவர்களுக்கு தேவையான மீன்கள் மற்றும் இறைச்சிக் கடைகளில் இறைச்சிகள் போன்றவற்றை வாங்கி சென்றனர். இந்த நிலையில் நாளை 17 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு உத்தரவு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால், இன்று அதிகாலை முதல் கடலூர் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போட்டிபோட்டுக்கொண்டு மீன் வாங்கி சென்றதைக் காண முடிந்தது.
அப்போது முன்பு இருந்தது போல் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் எந்தவித அரசு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் வழக்கம்போல் பொதுமக்கள் செயல்பட்டது கடலூர் மாவட்டத்தில் தொற்று நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் நிலவி உள்ளது.
இது மட்டுமின்றி பொதுமக்கள் மீன் வாங்குவதில் மிக உன்னிப்பாக இருந்ததால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்கள் போக்கில் இருந்து மாறாமல் அலட்சியமாக இருந்து வந்ததை காண முடிந்தது.
இந்த நிலையில் கூட்டம் அதிகமாக சேராமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பெருமளவிலான கெடுபிடிகள் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொற்று நோய் பரவல் முழுவதுமாக குறைப்பதற்கு ஏதுவாக அமையும்.
ஆகையால் பொதுமக்கள் சமூக நலனில் அக்கறைகொண்டு தொற்று நோய் பரவல் ஏற்படாதவாறு செயல்படுவதற்கு அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.