நாங்குநேரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புச்சுவரில் மோதி நெல்லையை சேர்ந்த டாக்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாங்குநேரி அருகே விபத்தில் டாக்டர் பலி
பதிவு: ஜனவரி 15, 2022 14:41 IST
கோப்புப்படம்
நெல்லை:
பாளை குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் சாகுல் அமீது. இவர் அந்த பகுதியில் மருத்துவமனை வைத்து நடத்தி வருகிறார்.
இவரது மகன் முகம்மது அப்சல் (வயது 43). இவரும் டாக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை முகமது அப்சல் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் காரில் நாகர்கோவில் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
ஏர்வாடி அருகே உள்ள தளபதி சமுத்திரம் 4 வழி சாலையில் கார் வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலை நடுவே உள்ள தடுப்பு சுவரில் கார் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த முகமது அப்சல் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி மற்றும் மகள் சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.