உள்ளூர் செய்திகள்
விபத்தில் பலியான முருகன், சவுமியா

விபத்தில் தந்தை-மகள் உயிரிழப்பு

Published On 2022-01-15 14:37 IST   |   Update On 2022-01-15 14:37:00 IST
வத்தலக்குண்டு அருகே பைக் மீது கார் மோதி தந்தை, மகள் உயிரிழந்தனர்
வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே சித்தரேவு பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது 47). இவரது மகள் சவுமியா (11), புகழ் (9) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு&செம்பட்டி சாலையில் சென்று கொண் டிருந்தார். சாலைப்புதூர் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் இவர்கள் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் முருகன் மற்றும் அவரது குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் சவுமியா மற்றும் புகழ் ஆகியோர் வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி சவுமியா உயிரிழந்தார். புகழ் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் காரை ஓட்டிவந்த ராம்கியிடம் விசாரித்து வருகின்றனர்.

விபத்தில் தந்தை மற்றும் மகள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News