உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.

திருப்பூரில் வாலிபரை கடத்தி அறையில் அடைத்து வைத்து சித்திரவதை - 3 பேர் கைது

Published On 2022-01-13 12:56 IST   |   Update On 2022-01-13 12:59:00 IST
சதீஷ்குமாரை ஒரு அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மண்ணரை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 20). இவருக்கும் கரூர் மாவட்டம் கடவூர் தாலுகாவை சேர்ந்த கார்த்திக் (22), திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சேர்ந்த ரியாஸ் (20) ஆகியோருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கார்த்திக், ரியாஸ் ஆகியோர் சேர்ந்து சதீஷ்குமாரை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று திருப்பூர் ராயபுரம் பகுதியில் ஒரு அறையில் அடைத்து வைத்து பணம் கேட்டு கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அறையில் சிறுவர் ஒருவர் இதற்கு உதவியுள்ளார். இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக், ரியாஸ் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் ஒருவன் என மொத்தம் 3 பேரை கைது செய்தனர்.

Similar News