உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஆற்று மணல் விற்பனை - விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு

Published On 2022-01-13 10:04 IST   |   Update On 2022-01-13 10:04:00 IST
ஆறுகளில் படிந்திருக்கும் மணல் நீண்ட காலமாக இயற்கையாக சேமிக்கப்பட்டது.
திருப்பூர்:

ஆற்று மணலை விற்பனை செய்யும் முடிவுக்கு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி கூறியதாவது:

ஆறுகளில் படிந்திருக்கும் மணல் நீண்ட காலமாக இயற்கையாக சேமிக்கப்பட்டது. ஆற்று நீரை சுத்தம் செய்வதும், நீரை சேமிப்பதும் இந்த மணல் தான். தமிழகத்தில் பல்வேறு ஆறுகளில் மணல் அள்ளப்பட்டதால் தற்போது பாறைகளின் மீது நீர் செல்கிறது. கடந்த ஆட்சியில் ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டது.

எம் சாண்ட், பி சாண்ட் ஆகியன கட்டுமானங்களுக்கு பயன்படுத்தப்பட்டு மக்களும் அதற்கு ஏற்ப மாறிவிட்டனர். தற்போது ஆற்று மணலை யூனிட் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்வது என மாநில அரசு அறிவித்துள்ளது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.

சுற்றுச்சூழல் மேலும் மாசுபடும். ஊர் பாலைவனமாகி விடும். லஞ்ச ஊழல் முறைகேடுகளும் தலைதூக்கும். தமிழக அரசு இந்த முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News