உள்ளூர் செய்திகள்
கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

Published On 2022-01-12 15:29 IST   |   Update On 2022-01-12 15:29:00 IST
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மனைவியை தாக்கியது தொடர்பாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம்:

புவனகிரி அரியகோஷ்டி தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் சசிகலா (வயது 44). இவரது கணவர் தட்சணாமூர்த்தி (59). இவரது கணவர் தினமும் குடித்துவிட்டு வீட்டில் சண்டை போட்டு வந்துள்ளார். நேற்று மனைவி மற்றும் இவரது மகள் சுபலட்சுமியிடம் (19) சண்டை போட்டுள்ளார்.

பின்னர் மகளை கீழே தள்ளி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து இவரது மனைவி பரங்கிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் தட்சணாமூர்த்தி மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Similar News