உள்ளூர் செய்திகள்
ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடந்தது.

கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி

Published On 2022-01-11 09:37 GMT   |   Update On 2022-01-11 09:37 GMT
விவசாயிகளிடம் நேரடி நெல் கொள்முதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சி நடந்தது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அண்ணா கல்யாண மண்டபத்தில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் செய்ய வி.ஏ.ஓ.க்கள், பற்றாளர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்புக்கு நுகர்பொருள் வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளரும், மாவட்ட வருவாய் அலுவலர் பாண்டியன் தலைமை தாங்கி பயிற்சி வகுப்பு நடத்தினார். 

மாவட்ட கொள்முதல் மற்றும் இயக்கம் துறை மேலாளர் பன்னீர்செல்வம், தரக்கட்டுபாட்டு பொருப்பு மேலாளர் முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது விவசாயிகளிடம் இருந்து விவசாயம் செய்த நிலத்துக்கு சிட்டா அடங்களை ஆன்லைனில் பதிவு செய்து அந்த பதிவு சரியானதா என வி.ஏ.ஓ., வேளாண்மை அலுவலரும் ஒப்புதல் செய்யவேண்டும். 

இதன் பிறகுதான் நேரடி கொள்முதல் செய்யும் பற்றாளர் விவசாயிகளிடம் இருந்து ஈரப்பதம் இல்லாமல் நெல்லை எடுக்கவேண்டும் என பயிற்சியின் போது வலியுறுத்தப்பட்டது.

இதற்கான பயிற்சிக்கு மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி, உள்ளிட்ட வி.ஏ.ஓ.க்கள், பற்றாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். 

மயிலாடுதுறையில் ஒரு கிராம நிர்வாக அலுவலர் சிட்டா அடங்கல் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் செய்துள்ளதை கண்டுபிடித்தனர். 

அந்த முறைகேடுகள் இனி நடந்துவிடாமல் தடுக்கவே மாவட்ட கலெக்டர் லலிதா ஆலோசனைப்படி இந்த ஆன்லைன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News