உள்ளூர் செய்திகள்
ரெயில்வே கேட் கீப்பர் அறையில் மோதிய கார்.

ரெயில்வே கேட் கீப்பர் அறையில் மோதிய கார்

Published On 2022-01-11 10:39 IST   |   Update On 2022-01-11 10:39:00 IST
புதுவை அருகே ரெயில்வே கேட் கீப்பர் அறையில் கார் மோதியது.
புதுச்சேரி:

புதுவை அருகே ரெயில்வே கேட் கீப்பர் அறையில் கார் மோதியது.
விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு வந்த கார் அதிகாலை கண்டமங்கலம் சின்னபாபு சமுத்திரம்  ரெயில்வே கேட்டை கடக்க முயன்றது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி  புதுவை& -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பறந்து சென்று ரெயில்வே கேட் அருகே விழுந்தது. 
அடுத்ததாக கார் சின்னபாபு  சமுத்திரம் ரெயில்வே கேட் கீப்பர் அறை மீது மோதியது. கார் டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் இல்லை. 

சம்பவ இடத்துக்கு கண்டமங்கலம் போலீசார் விரைந்து வந்து காரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். 
இதுகுறித்து கண்ட மங்கலம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Similar News