உள்ளூர் செய்திகள்
வில்லியனூரில் பரபரப்பை ஏற்படுத்திய புதுமாப்பிள்ளை கொலையில் தம்பதி உள்பட 5 பேர் கைது
வில்லியனூர் புதுமாப்பிள்ளை கொலையில் தம்பதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வில்லியனூர்:
வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்த சங்கர் மகன் சதீஷ் என்ற மணிகண்டன் (வயது 28). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு கடந்த 4 மாதத்துக்கு முன் மதிவதனா (25) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
சம்பவத்தன்று இரவு சதீசின் எதிர்வீட்டை சேர்ந்த சங்கர் (32), அவரது மனைவி ரமணி (28) ஆகியோர் தங்களது திருமண நாளை தெருவில் கேக் வெட்டி கொண்டாடினர். விழாவில் பங்கேற்ற ரமணியின் தம்பி ராஜா உள்பட சிலர் நடுரோட்டில் குடித்து விட்டு அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை சதீஷ் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலர் தட்டிக்கேட்டனர்.
இதில் ஆத்திரம் அடைந்த ரமணியின் தம்பி ராஜா அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் இரவில் மீண்டும் அங்கு வந்து தனது வீட்டின் முன் செல்போனில் பேசிக் கொண்டிருந்த சதீசை, ராஜா உள்ளிட்ட அவரது நண்பர்கள் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சதீசின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர்.
இதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டனர்.
வில்லியனூரில் பரபரப்பை ஏற்படுத்திய சதீஷ் கொலை தொடர்பாக மூர்த்தி நகரை சேர்ந்த சங்கர் (35), அவரது மனைவி ரமணி (28), கோபாலன்கடை பகுதியை சேர்ந்த ரமணியின் தம்பி ராஜா (26), வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்த தமிழ் செல்வன் என்ற தமிழ் (25), விழுப்புரம் மாவட்டம் தென்னல் பகுதியை சேர்ந்த அசாருதீன் என்ற அசார் (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான 5 பேரையும் கொரோனா பரிசோதனைக்குப் பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் போலீசார் அடைத்தனர்.
சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்த வில்லியனூர் போலீசாரை, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் வெகுவாக பாராட்டினார்.